திருப்பதி கோயில் நேரம்
காலை 3.30 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். பெயரளவுக்கு அரை மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது.திருப்பதி வரலாறு
காலை 3.30 மணி முதல் இரவு 3 மணி வரை திறந்திருக்கும். பெயரளவுக்கு அரை மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது.இந்தியாவிலேயே அதிக வருமானம் உள்ள கோயில். முடி காணிக்கை மூலம் மட்டுமே பல கோடிகளை சம்பாதிக்கும் தலம். திருப்பதி லட்டு உலகப்பிரசித்தி பெற்றது. புரட்டாசி சனி விரதம் இந்தப்பெருமாளை முன்னிட்டே அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவில் மிக அதிகமான மக்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். புரட்டாசி பிரமோற்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவை நடக்கும். அன்று சுவாமி பவனியின் போது மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம். இதன் காரணமாக ஒரு காலத்தில் சுவாமி பவனி முடியும் வரை கோயில் நடை அடைக்கப்பட்டது. தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால், பெயரளவுக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும் நடை அடைக்கப்படுகிறது. இந்த விழாவின் போது ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கூடுகிறார்கள்.பொதுவாக பெருமாளை பசுக்களை மேய்க்கும் கோலத்தில் தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் திருப்பதியில் உற்சவப் பெருமாள் மட்டுமே "ஆடு மேய்க்கும்" கோலத்தில் காட்சியளிப்பார். இந்த காட்சியை ஊஞ்சல் உற்சவத்தின் போது தரிசிக்கலாம்.இந்தியா வில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி ஒரு மிகப்பெரிய திருத்தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆகவே இந்த திருத்தலமும் என்றும் நிரம்பி வழிந்த படியே காட்சியளிக்கும். திரு + பதி திருப்பதி ஆயிகியது திரு என்றால் உயர்ந்த பதிஎன்றால் இறைவன் வாழும் இடம்
தமிழில் திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. இதன் பொருள் லக்ஷ்மியின் (திரு) கணவன் (பதி) என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. திருமலை ஏழு மலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. (இது தெலுங்கில் எடு-கொண்டலு என்றும் தமிழில் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு சிகரங்களைக் கொண்ட மலைகளில் திருமலை உள்ளது. இது ஆதிசேஷனின் ஏழு தலைகளை குறித்து வருவதால் இந்த மலைக்கு சேஷாசலம் என்று பெயர் உள்ளது. சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிஷபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய எழும் இந்த மலை சிகரங்களின் பெயர்களாகும்.
திருப்பதி வெங்கடாசலபதி என்றால் பலருக்கும் அவர் பணக்காரக்கடவுள் என்று தான் தெரியும். ஆனால் உண்மையில் வெங்கடாசலபதி கடன்காரர். அவரது வரலாற்றுப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மறுபிறவி கிடையாது.
உலகிலேயே பழமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.500-300 இல் எழுதப்பட்ட தமிழ்ச் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும் குறிப்பிட்டுள்ளன.
இந்த வெங்கடேஸ்வரா ஆலயம் எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் இது பல ராஜாங்கங்களால் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது. முதன்முதலில் இக்கோவிலை தொண்டை மான் என்ற பல்லவ மன்னனால் ஆக்கம் பெற்றதாக கூறப்படுகிறது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் பல்லவர்களாலும், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்களாலும், கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் விசயநகர பேரரசாலும் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வந்திருக்கிறது.விசய நகர பேரரசின் மிகப்பெரிய மன்னனான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர், இந்த கோவிலுக்காக தங்கமும் மற்ற விலை உயர்ந்த ஆபரணங்களையும் நன்கொடையாக தந்துள்ளார். இந்த கோவிலுடன் ஒட்டி நிறைய கோவில்களையும் கட்டியுள்ளார். திருப்பதியில் இருந்து சில கி.மீ.கள் தொலைவில் தென் மேற்கு புறம் தள்ளி இருக்கும் சந்திரகிரி என்னும் கிராமம் விஜயநகர சக்கரவர்த்தியின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது.
வைணவம் பெரிதாக பின்பற்றபட்ட கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் திருப்பதி, ஆழ்வார்களால்(வைணவ முனிவர்கள்) கலியுக வைகுண்டம் என்று போற்றப்பட்டது. பக்தி இயக்கத்தை சேர்ந்த ஆழ்வார்கள் திராவிட பூமியில், வெங்கடேஸ்வரர் மீது அவர்கள் இயற்றிய பாடல்களுக்காகவும், இலக்கியங்களுக்காகவும் பெயர் போனவர்கள். வைணவ சம்பரதாயத்தில்ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக விளங்குவது திருப்பதி ஆலயம் தான். பதினோராம் நூற்றாண்டில் இந்த கோவிலின் ஆச்சார அனுஷ்டானங்கள் இராமானுஜ ஆச்சார்யரால் முறையாக்கப்பட்டன.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், அரங்கநாதசுவாமி கோவில் ஆகியவை இசுலாமியர்களால் சூறையாடப்பட்டபோது தென்னிந்தியாவில் தப்பி இருந்த இடம் திருப்பதி மட்டும்தான். இந்த இசுலாமிய பிரவேசங்களின் பொழுது ஸ்ரீரங்கத்தில் இருந்த திருவரங்கர் திரு உருவச் சிலை திருப்பதிக்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வை குறிப்பதற்காக கட்டப்பட்ட ரங்கநாத மண்டபம் இன்றும் திருப்பதியில் இருக்கிறது.
No comments:
Post a Comment